Sunday 3 September 2023

ராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா?

இராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா?
                  இராஜராஜன் சோழன்


இராஜராஜன் ஆட்சி காலத்தில் தீண்டாமை இருந்தது, அவர்கள் ஊர்களில் இருந்து ஒதுக்கப்பட்டு சேரி என்ற இடத்தில் வாழ கட்டாயப்படுத்த பட்டனர். மேலும் அவர்கள் பொது குளத்தில் நீர் எடுக்ககூட முடியவில்லை , இதுபோன்ற கொடுமைகல் ராஜராஜன் காலத்தில் நடந்து இருப்பதாக ஒரு சில தரப்பினர் சொல்கின்றார்கள்.

இது எல்லாம் உன்மையா?

முதலில் இந்த குற்றச்சாட்டுகள் எதன் அடிப்படையில் எழுந்தது என நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தஞ்சை பெரிய கோவிலில் மொத்தம் 1.5லட்சம் எழுத்துகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள இடம் தஞ்சை பெரிய கேள்விகள் மட்டுமே உள்ளது .
இங்குள்ள சோழர் கால கல்வெட்டு எழுத்துகளின் பெரும் பகுதியை, சராசரி அறிவு உள்ள எந்த ஒரு நபராலும் படித்து புரிந்து கொள்ள முடியும்.
            
              இன்றைய காலத் தமிழ் எழுத்துக்களுக்கும் சோழர் காலத் தமிழ் எழுத்துக்களுக்கு   இடையே பெரிய அளவில் வேருபாடு ஒன்றும் இல்லை. எழுத்தின் அமைப்பு சற்று மாறி இருக்கும், ஒன்று எழுத்துகளுக்குப் புள்ளி இருகாது, இரட்டைக் கம்பு இருக்காது, வார்த்தைகளுக்கு நடுவில் இடைவேலி இருக்காது என சிறிய வேறுபாடுகள் தான் இருக்கும்.

ஆனால், அப்படி படிக்கும் வார்த்தைகளுக்கு உரிய பொருளை கல்வெட்டுகளை படிக்கின்ற நபரால் சரியாக உணர முடியுமா? என்றாள் முடியாது
வார்த்தைகள் வேண்டுமானால் மாறாமல் இருக்குமே தவிர அதன் பொருள் அப்படியே இருக்காது ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப பொருள் மாறும் 
              
            உதாரணமாக, திருக்குறளில் உள்ள பல வார்த்தைகளுக்கு இப்போது பொருள் மாறி இருக்கிறது. திருவள்ளுவர் காலத்தில் வெகுளி என்ற சொல்லின் பொருள்  கோபத்தைக் குறித்தது. வெகுளாமை என்றாள் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே பொருள் ஆகும். ஆனால் இன்றைய நிலையில் வெகுளி என்ற சொல்லானது வெள்ளந்தி எனவும் ஒரு அப்பாவியை வெகுளியான மனுஷன் என்றும் பொருள் மாற்றி குறிப்பிடப் படுகிறது. 
இது போன்று பல வார்த்தைகள் பொருள் மாற்றப்பட்டு உள்ளது. 

              இதுபோன்ற சிக்கல்கள் பிற்காலச்  சோழர்  காலச் சொற்களுக்கும் தற்கால சொற்களுக்கும் இடையில் கூட உண்டு. உதாரணமாக சோழர் கால கல்வெட்டில் 'புருஷனும் பொண்டாடியும் வந்தார்கள்' என்றிருந்தால் அதற்கு ஆணும் பெண்ணும் வந்தார்கள் என்பதே அர்த்தம். ஆனால் இன்று நமதுகாலகட்டதில் படிக்கும் போது கணவனும் மனைவியும் வந்தார்கள் என்றுதான் இதைப் புரிந்து கொள்வார்கள். 

               இராஜராஜ சோழனுடைய கல்வெட்டுகளை முதன் முதலில் படித்தவர் டாக்டர் ஹுல்ஷ்(HULTZH) ஆவார்.  தஞ்சை பெரியகோவிலைக் கட்டியவர் இராஜராஜன் என்ற உன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தினார். இவர் 1887 லில் தஞ்சை பெரியகோவிலைக் கல்வெட்டை படிக்க தொடங்கி 1892 ஆம் ஆண்டில் ' தென்னிந்தியக் கல்வெட்டுகள்' என்ற நாலில் வெளியிட்டார். அவர்தான் தஞ்சை பெரியகோவிலில் இருப்பவை கிறுக்கன் அல்ல தமிழ் எழுத்துகள் என்ற உன்மையை சமூகமக்களுக்கு தெரியப்படுத்தினார். 

                  சோழர் கல்வெட்டை படித்த ஆய்வாளர்கள் அனைவரும்  அந்த சொற்களுக்கு 20 ஆம் நூற்றாண்டின் அர்த்தையே பெரும்பாலும் சொன்னார்கள். அதனால்  கல்வெட்டிலுள்ள  தீண்டாச் சேரி பகுதி என்ற அந்த இடமானது தீண்டத்தகாதவர்கள் வாழ்ந்த சேரிப் பகுதி என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். 

சேரி என்பது என்ன? :
                  இராஜராஜன் காலத்தில் எதை தீண்டாமை சேரி என்று காரினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். அதை தெரிந்து கொண்டாலே அக்காலகட்டத்தில் தீண்டாமை இருந்ததா என்பது தெரியவந்துவிடும். சோரி என்பது சேழர் கால்வெட்டில் தளிச்சேரி என்று தேவர்கள் வாழும் பகுதியாகவும். பறைச்சேரி என்பது அரசின் செய்தியை வெளியிடுபவர்களாகவும்  குறிப்பிடப்படுகிறது. அது போலத்தான் தீண்டாசேரியும் மக்கள் வாழும் இடம். ஆனால் சரியான ஆய்வுகளை செய்யாமல் தீண்டாமை தீண்டசேரி என்ற பகுதியில் வாழ்ந்த மக்களை  தாழ்த்தப்பட்டவர்கள் என்று தவறாக சொல்லப்படுகிறது. 
                 தீண்டசேரி என்பதன
 தமிழர்கள்  தாய் நிலத்தில் அதுவும் ஒன்று. தொல்காப்பியத்தில் தமிழகத்தில் உள்ள நிலங்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பெயர்களும் வைக்கப்பட்டு இருந்தன. 
                இந்த வகை நிலங்களை கொண்டு ஊர் பெயர்கள் அமைந்து இருக்கும். இதுபோலவே காடும் காடு சார்ந்த பகுதியகவும்
 உள்ள முல்லை நிலத்திற்கு உரிய 3 பெயர்கள் தொல்காப்பியம் கூறுகிறது. அவை பாடி, சேரி, பள்ளி.
 திருக்காட்டுப்பள்ளி  என்பதில் உள்ள பள்ளி என்பது எப்படி ஊர் பெயரோ அதேபோலத்தான் தீண்டசேரி என்பதும் ஊர் பெயர் ஆகும். 
சோழர் காலத்தில் காட்களை அழித்துதான் குடியேற்றங்கள் அமைத்தனர். அதால் சோழர்களால் காடுகளை அழித்து உருபெற்ற இடங்கள் மலை யோரத்திலும் நகரத்தை விட்டு தல்லியும் இருக்கும் அந்த இடத்திற்கு தீண்டாசேரி என்றும் பெயர் வைத்தனர். 

தீண்டசேரி என்பது ஒரு. ஊர் பெயர் மட்டுமே தவிர அது உதுக்க பட்ட மக்கள் வாழும் இடம் இல்லை சொல்லும் பொருளும் காலத்திற்கு ஏற்றவாற மாரும்
அதை நாம் தான் சரியாக படித்து புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தவறான புரிதல் வரலாற்றில் பல தவறான மாற்றத்தை ஏற்படுத்தும்.
 இராஜராஜன் ஆட்சி காலத்தில் தாழ்த்த பட்ட மக்கள் என்று யாரும் இல்லை. விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் தான் தாழ்த்த பட்டமக்கள் என்ற ஒரு இனத்தை ஏற்படுத்தினர்
சோழர் கால  ஆட்சிலம் முடிந்தபிறகு  .