ஏன்? கவிதை!!

ஏன்? ஏன்? ஏன்? கண்கள் பார்ப்பது எல்லாம் எனக்கு கேள்வியாக மாறிவது ஏன்? மனம்விரும்பி ஆசைப்படும் ஒவ்வொன்றும் என்னிடம் நீ ஆசைபடவே தகுதியில்லாதவள் என்று கூறுவது ஏன்? உறவுகள் மீது அன்பு வைக்கிறேன் அவர்கள் என்னை அரவனைக்காமல் அவமதித்து செல்வது ஏன்? நம்பிக்கை உடையவன் நண்பன் என்றேன் நான் உன்னுடைய நண்பன் இல்லை என்று விலகிசெல்வது ஏன்? மனம் ஒரு பக்கம் மட்டும் யோசிக்காமல் இரு பக்கமும் யோசித்து யோசித்து முடிவுகளை எடுப்பது ஏன்? என்னை நம்பியவர்கள் யாரும் மனம் வருந்தகூடாது என சிந்தித்து தினம் நான் மனம் வருந்துவது ஏன்? உன்மைகளை சொன்னாலும் மற்றவர்கள் இல்லை என்றதும் என் வார்த்தைகள் பொய்யோ!! என்று நானே யோசிப்பது ஏன்? எனக்கு பிடிக்கும் பிடிக்காது என கூறாமல் உங்கள் விருப்பம் என்று கூறுவது ஏன்? தவறுகள் செய்யாமல் உலகத்தில் வாழும் மக்களுக்கு பயம் கொள்வது ஏன்? பார்க்கும் அனைவரையும் பால் என்று நினைப்பது ஏன்? என் குணத்தை மாற்ற செல்லும் நண்பர்களிடம் மௌனத்தில்...