Monday 4 September 2023

சிறுகதை

          
                                                                 சிறுகதை 
                                
                                                                                                  ஆசிரியர் - சௌமியா 


                                                ஒரு பயணம் புது தெளிவு

நான் வெண்ணிலா வனத்தில் இருக்கின்ற நிலவா என்று கேட்காதிர்கள், நாளும் பொழுதை கடக்க முடியாமல் தவிக்கும் பெண் நான். எல்லாருடைய வாழ்க்கையும் அவர்களுக்கு ஓட்ட பந்தயமாகவே  இருக்கிறது.  தினமும் ஓடிக்கொண்டே  இருக்க வேண்டியதாக அமைகிறது.



 
           என் வாழ்கையும் அப்படித்தான் இருந்தது எனது கடந்த காலத்தில் .
குடும்பத்தில் மூத்தபிள்ளை  நான். உடன் பிறந்தவள் ஒரு தங்கை, என் தந்தை ஒரு விபத்தில்  முன்று ஆண்டுக்கு முன் இறந்து விட்டார் . எனக்கும் தங்கையிக்கும் துணையாக இருந்தவர் என் அம்மாதான். அப்பா இறந்த பிறகு சொந்தகாரர்கள் அனைவரும் எங்களை கைவிட்டனர், யாரும் இல்லாத தனி குடும்பமாக நாங்கள் தவித்தோம் .என் அம்மா என்னையும் என் தங்கை அமுத வையும் கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.  நாங்கள் மூவரும் ஏதோ  ஒரு பயத்துடன் ஒவ்வொரு நாளையும்  கடந்து செல்வோம்

             என் அம்மா எங்களை பள்ளி படிப்புடன் நிறுத்தி விடாமல் கல்லூரிலும் சேர்த்தி விட்டார் . எனக்குள் பயம் அதிகரித்தது என் அம்மாவிற்கு நான் என்னசெய்ய போகிறேன், என் அம்மாவின் சுமைகளை எப்போது நன் ஏற்றுகொள்ள போகிறேன் .  என்ற பல குழப்பங்கள் எனக்குள். சிலநாள்  என்  தூக்கத்தைதுளைத்து இருக்கிறேன். என் அம்மவுக்காகவும் தங்கைக்காகவும் நான் நன்றாக படிக்க ஆரமித்தேன். இருந்தாலும் அம்மா கஷ்டப்படும் போதுலாம் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போய் அம்மாவைபர்த்துக வேண்டும் என்று தேன்றும். இதை  நான் அம்மா விடம் சொல்லி இருக்கிறேன் அதற்க்கு அம்மா உன் படிப்பை நிறுத்தி உன் கனவுகளை சிதைதுகொள்ளதே , என் உழைப்பு எனக்கு சுமையாக இல்லை சுகமாக தன இருக்கிறது என்பார்.

            அம்மாவின் போராட்டம் வீண்போகவில்லை  தினமும்  பயத்த்துடனும் தோல்லியுடனும் தெளிவு இல்லாமல் திரிந்த எனக்கு. ஒரு பயணம் எங்கள் வாழ்கையையே மாற்றியது .
        
            கல்லூரி படிப்பு முடித்தவுடன் நான் பல கம்பெனிகளுக்கு  வேலை தேடி அழைத்தேன் என் படிப்பிற்கும் என் திறமைக்கும் எங்கும் மதிப்பு இல்லாமல் போனது ஆனால் கடவுளின்  சித்தம்  நான் என் நண்பரின் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக  திருநல்வேலிக்கு  செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. அங்கு எதிர் பாராதவிதமாக நான் வேலை தேடி இரங்கிய கம்பெனியின் முதலாளியை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது . அவர் கையில் வைத்து இருந்த கைபேசியில்  கம்பெனி சம்மந்தபட்ட அனைத்து பையில்ஸ் எல்லாம், தவறுதலாக அழிந்து விட்டது. அவருக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டு இருந்தார். அங்கு நடந்து கொண்டு இருந்த அனைத்தையும் அமைதியாக கவனித்து விட்டு அவரிடம் சென்று, அவரது கைபேசியை வாங்கி அழிந்த அனைத்து பயில்ஸ்சையும் எடுத்து தந்தேன். அதன் பிறகு என்னை அறிமுகம்செய்து கொண்டேன். என் பேசி திறமையையும் அறிவையும் பார்த்து என்னை அவரது கம்பெனியில் பணியில் சேர்ந்து கொள்ளும்படி  எனக்கு வேலையும் தந்தார் .எனக்கு என்ன சொல்வவது என்று ஒன்னும் புரியாமல் திகைத்து நின்றேன் .

              என் விடமுயர்சியும்,  அம்மாவின்  நம்பிக்கையும்,  அன்பு தங்கை கொடுத்த ஆருதல்களும் வீன் போகவில்லை.  என் அப்பாவின்  ஆசிர்வதமும்  நான் தினம் வணக்கும் என் ஐயன் ஈசனும் என்னை கை விடவில்லை.
ஆனந்தத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினேன். அவசர அவசரமாக வீடுக்கு கேளம்பினேன். வீட்டிக்கு வந்ததும் நடந்த விசியத்தை எல்லாம் அம்மாவிடமும் தங்கையிடமும் சொன்னேன் அம்மா மிகவும் மகிழ்சி அடைந்தார் .என் அம்மாவின் முகத்தில் நான் கண்ட இன்பம் என் வாழ்கயில் மறக்க முடியாத நினய்வுகள் அம்மாவின் கடின உழைப்பு வீண்போகவில்லை .
           
              அப்பா இறந்த பிறகு பிரிந்து சென்ற உறவுகள் அனைவரும் என் அம்மாவை தேடி வந்து பேசினார்கள் அன்றுதான் என் தேடலுக்கான விடை கிடைத்தது. வாழ்க்கையில் இன்றைய நிலையானது நாளை மாறிவிடும். இன்றைய நாள் இன்று வேண்டுமானால் கடினமாக இருக்கும் அந்த வலிகளை தாங்கி கொண்டல், பயணம் செயும் வழியானது வருங்கலத்திக்கு கூட்டி செல்லும்.  என் வாழ்கையில் மேலும் மேலும் நகரத்து கொண்டே இருப்பேன்  இறக்கும் வரை .
      
              வெண்ணிலா தன்னுடைய வாழ்கையை உணர்ந்து வலிகளை தாண்டி வாழதெடங்கி விட்டால் வெண்ணிலாவை போல நிறைய  பெண்கள் வாழ்கை இப்படிதான் இருக்கிறது. அவர்களுக்கு வெண்ணிலா வின் வாழ்கை ஒரு உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன் ,
           
                                                             நன்றி