Thursday 7 September 2023

ஏன்? கவிதை!!

                      ஏன்?  ஏன்? ஏன்? 


கண்கள் பார்ப்பது எல்லாம் எனக்கு கேள்வியாக மாறிவது ஏன்? 

மனம்விரும்பி  ஆசைப்படும் ஒவ்வொன்றும் என்னிடம் நீ ஆசைபடவே தகுதியில்லாதவள் என்று கூறுவது ஏன்? 

உறவுகள் மீது அன்பு வைக்கிறேன்  அவர்கள் என்னை அரவனைக்காமல் அவமதித்து செல்வது ஏன்? 

நம்பிக்கை உடையவன் நண்பன் என்றேன் நான் உன்னுடைய நண்பன் இல்லை என்று விலகிசெல்வது ஏன்?

மனம் ஒரு பக்கம் மட்டும் யோசிக்காமல் இரு பக்கமும் யோசித்து யோசித்து முடிவுகளை எடுப்பது ஏன்? 

என்னை நம்பியவர்கள் யாரும் மனம் வருந்தகூடாது என சிந்தித்து தினம் நான் மனம் வருந்துவது ஏன்? 

உன்மைகளை சொன்னாலும் மற்றவர்கள் இல்லை என்றதும் என் வார்த்தைகள் பொய்யோ!! என்று  நானே யோசிப்பது ஏன்? 

எனக்கு பிடிக்கும் பிடிக்காது என கூறாமல் உங்கள் விருப்பம் என்று கூறுவது ஏன்? 

தவறுகள் செய்யாமல் உலகத்தில் வாழும் மக்களுக்கு  பயம் கொள்வது ஏன்? 

பார்க்கும் அனைவரையும் பால் என்று நினைப்பது ஏன்?

என் குணத்தை மாற்ற செல்லும் நண்பர்களிடம் மௌனத்தில் முடியாது என்று சொல்வது ஏன்? 

  என் மனசும் மூளையும்!!

ஏன் ஏன் என்று எனக்குள் எத்தனை கேள்விகள்  
அவை யாவுக்கும் பதில் தெரிந்தும் தெரியாமலும் பயணித்து பறவையாய்ப் பறந்து செல்கிறேன்! 

Monday 4 September 2023

சிறுகதை

          
                                                                 சிறுகதை 
                                
                                                                                                  ஆசிரியர் - சௌமியா 


                                                ஒரு பயணம் புது தெளிவு

நான் வெண்ணிலா வனத்தில் இருக்கின்ற நிலவா என்று கேட்காதிர்கள், நாளும் பொழுதை கடக்க முடியாமல் தவிக்கும் பெண் நான். எல்லாருடைய வாழ்க்கையும் அவர்களுக்கு ஓட்ட பந்தயமாகவே  இருக்கிறது.  தினமும் ஓடிக்கொண்டே  இருக்க வேண்டியதாக அமைகிறது.



 
           என் வாழ்கையும் அப்படித்தான் இருந்தது எனது கடந்த காலத்தில் .
குடும்பத்தில் மூத்தபிள்ளை  நான். உடன் பிறந்தவள் ஒரு தங்கை, என் தந்தை ஒரு விபத்தில்  முன்று ஆண்டுக்கு முன் இறந்து விட்டார் . எனக்கும் தங்கையிக்கும் துணையாக இருந்தவர் என் அம்மாதான். அப்பா இறந்த பிறகு சொந்தகாரர்கள் அனைவரும் எங்களை கைவிட்டனர், யாரும் இல்லாத தனி குடும்பமாக நாங்கள் தவித்தோம் .என் அம்மா என்னையும் என் தங்கை அமுத வையும் கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.  நாங்கள் மூவரும் ஏதோ  ஒரு பயத்துடன் ஒவ்வொரு நாளையும்  கடந்து செல்வோம்

             என் அம்மா எங்களை பள்ளி படிப்புடன் நிறுத்தி விடாமல் கல்லூரிலும் சேர்த்தி விட்டார் . எனக்குள் பயம் அதிகரித்தது என் அம்மாவிற்கு நான் என்னசெய்ய போகிறேன், என் அம்மாவின் சுமைகளை எப்போது நன் ஏற்றுகொள்ள போகிறேன் .  என்ற பல குழப்பங்கள் எனக்குள். சிலநாள்  என்  தூக்கத்தைதுளைத்து இருக்கிறேன். என் அம்மவுக்காகவும் தங்கைக்காகவும் நான் நன்றாக படிக்க ஆரமித்தேன். இருந்தாலும் அம்மா கஷ்டப்படும் போதுலாம் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போய் அம்மாவைபர்த்துக வேண்டும் என்று தேன்றும். இதை  நான் அம்மா விடம் சொல்லி இருக்கிறேன் அதற்க்கு அம்மா உன் படிப்பை நிறுத்தி உன் கனவுகளை சிதைதுகொள்ளதே , என் உழைப்பு எனக்கு சுமையாக இல்லை சுகமாக தன இருக்கிறது என்பார்.

            அம்மாவின் போராட்டம் வீண்போகவில்லை  தினமும்  பயத்த்துடனும் தோல்லியுடனும் தெளிவு இல்லாமல் திரிந்த எனக்கு. ஒரு பயணம் எங்கள் வாழ்கையையே மாற்றியது .
        
            கல்லூரி படிப்பு முடித்தவுடன் நான் பல கம்பெனிகளுக்கு  வேலை தேடி அழைத்தேன் என் படிப்பிற்கும் என் திறமைக்கும் எங்கும் மதிப்பு இல்லாமல் போனது ஆனால் கடவுளின்  சித்தம்  நான் என் நண்பரின் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக  திருநல்வேலிக்கு  செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. அங்கு எதிர் பாராதவிதமாக நான் வேலை தேடி இரங்கிய கம்பெனியின் முதலாளியை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது . அவர் கையில் வைத்து இருந்த கைபேசியில்  கம்பெனி சம்மந்தபட்ட அனைத்து பையில்ஸ் எல்லாம், தவறுதலாக அழிந்து விட்டது. அவருக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டு இருந்தார். அங்கு நடந்து கொண்டு இருந்த அனைத்தையும் அமைதியாக கவனித்து விட்டு அவரிடம் சென்று, அவரது கைபேசியை வாங்கி அழிந்த அனைத்து பயில்ஸ்சையும் எடுத்து தந்தேன். அதன் பிறகு என்னை அறிமுகம்செய்து கொண்டேன். என் பேசி திறமையையும் அறிவையும் பார்த்து என்னை அவரது கம்பெனியில் பணியில் சேர்ந்து கொள்ளும்படி  எனக்கு வேலையும் தந்தார் .எனக்கு என்ன சொல்வவது என்று ஒன்னும் புரியாமல் திகைத்து நின்றேன் .

              என் விடமுயர்சியும்,  அம்மாவின்  நம்பிக்கையும்,  அன்பு தங்கை கொடுத்த ஆருதல்களும் வீன் போகவில்லை.  என் அப்பாவின்  ஆசிர்வதமும்  நான் தினம் வணக்கும் என் ஐயன் ஈசனும் என்னை கை விடவில்லை.
ஆனந்தத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினேன். அவசர அவசரமாக வீடுக்கு கேளம்பினேன். வீட்டிக்கு வந்ததும் நடந்த விசியத்தை எல்லாம் அம்மாவிடமும் தங்கையிடமும் சொன்னேன் அம்மா மிகவும் மகிழ்சி அடைந்தார் .என் அம்மாவின் முகத்தில் நான் கண்ட இன்பம் என் வாழ்கயில் மறக்க முடியாத நினய்வுகள் அம்மாவின் கடின உழைப்பு வீண்போகவில்லை .
           
              அப்பா இறந்த பிறகு பிரிந்து சென்ற உறவுகள் அனைவரும் என் அம்மாவை தேடி வந்து பேசினார்கள் அன்றுதான் என் தேடலுக்கான விடை கிடைத்தது. வாழ்க்கையில் இன்றைய நிலையானது நாளை மாறிவிடும். இன்றைய நாள் இன்று வேண்டுமானால் கடினமாக இருக்கும் அந்த வலிகளை தாங்கி கொண்டல், பயணம் செயும் வழியானது வருங்கலத்திக்கு கூட்டி செல்லும்.  என் வாழ்கையில் மேலும் மேலும் நகரத்து கொண்டே இருப்பேன்  இறக்கும் வரை .
      
              வெண்ணிலா தன்னுடைய வாழ்கையை உணர்ந்து வலிகளை தாண்டி வாழதெடங்கி விட்டால் வெண்ணிலாவை போல நிறைய  பெண்கள் வாழ்கை இப்படிதான் இருக்கிறது. அவர்களுக்கு வெண்ணிலா வின் வாழ்கை ஒரு உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன் ,
           
                                                             நன்றி   

                  

 


Sunday 3 September 2023

ராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா?

இராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா?
                  இராஜராஜன் சோழன்


இராஜராஜன் ஆட்சி காலத்தில் தீண்டாமை இருந்தது, அவர்கள் ஊர்களில் இருந்து ஒதுக்கப்பட்டு சேரி என்ற இடத்தில் வாழ கட்டாயப்படுத்த பட்டனர். மேலும் அவர்கள் பொது குளத்தில் நீர் எடுக்ககூட முடியவில்லை , இதுபோன்ற கொடுமைகல் ராஜராஜன் காலத்தில் நடந்து இருப்பதாக ஒரு சில தரப்பினர் சொல்கின்றார்கள்.

இது எல்லாம் உன்மையா?

முதலில் இந்த குற்றச்சாட்டுகள் எதன் அடிப்படையில் எழுந்தது என நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தஞ்சை பெரிய கோவிலில் மொத்தம் 1.5லட்சம் எழுத்துகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள இடம் தஞ்சை பெரிய கேள்விகள் மட்டுமே உள்ளது .
இங்குள்ள சோழர் கால கல்வெட்டு எழுத்துகளின் பெரும் பகுதியை, சராசரி அறிவு உள்ள எந்த ஒரு நபராலும் படித்து புரிந்து கொள்ள முடியும்.
            
              இன்றைய காலத் தமிழ் எழுத்துக்களுக்கும் சோழர் காலத் தமிழ் எழுத்துக்களுக்கு   இடையே பெரிய அளவில் வேருபாடு ஒன்றும் இல்லை. எழுத்தின் அமைப்பு சற்று மாறி இருக்கும், ஒன்று எழுத்துகளுக்குப் புள்ளி இருகாது, இரட்டைக் கம்பு இருக்காது, வார்த்தைகளுக்கு நடுவில் இடைவேலி இருக்காது என சிறிய வேறுபாடுகள் தான் இருக்கும்.

ஆனால், அப்படி படிக்கும் வார்த்தைகளுக்கு உரிய பொருளை கல்வெட்டுகளை படிக்கின்ற நபரால் சரியாக உணர முடியுமா? என்றாள் முடியாது
வார்த்தைகள் வேண்டுமானால் மாறாமல் இருக்குமே தவிர அதன் பொருள் அப்படியே இருக்காது ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப பொருள் மாறும் 
              
            உதாரணமாக, திருக்குறளில் உள்ள பல வார்த்தைகளுக்கு இப்போது பொருள் மாறி இருக்கிறது. திருவள்ளுவர் காலத்தில் வெகுளி என்ற சொல்லின் பொருள்  கோபத்தைக் குறித்தது. வெகுளாமை என்றாள் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே பொருள் ஆகும். ஆனால் இன்றைய நிலையில் வெகுளி என்ற சொல்லானது வெள்ளந்தி எனவும் ஒரு அப்பாவியை வெகுளியான மனுஷன் என்றும் பொருள் மாற்றி குறிப்பிடப் படுகிறது. 
இது போன்று பல வார்த்தைகள் பொருள் மாற்றப்பட்டு உள்ளது. 

              இதுபோன்ற சிக்கல்கள் பிற்காலச்  சோழர்  காலச் சொற்களுக்கும் தற்கால சொற்களுக்கும் இடையில் கூட உண்டு. உதாரணமாக சோழர் கால கல்வெட்டில் 'புருஷனும் பொண்டாடியும் வந்தார்கள்' என்றிருந்தால் அதற்கு ஆணும் பெண்ணும் வந்தார்கள் என்பதே அர்த்தம். ஆனால் இன்று நமதுகாலகட்டதில் படிக்கும் போது கணவனும் மனைவியும் வந்தார்கள் என்றுதான் இதைப் புரிந்து கொள்வார்கள். 

               இராஜராஜ சோழனுடைய கல்வெட்டுகளை முதன் முதலில் படித்தவர் டாக்டர் ஹுல்ஷ்(HULTZH) ஆவார்.  தஞ்சை பெரியகோவிலைக் கட்டியவர் இராஜராஜன் என்ற உன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தினார். இவர் 1887 லில் தஞ்சை பெரியகோவிலைக் கல்வெட்டை படிக்க தொடங்கி 1892 ஆம் ஆண்டில் ' தென்னிந்தியக் கல்வெட்டுகள்' என்ற நாலில் வெளியிட்டார். அவர்தான் தஞ்சை பெரியகோவிலில் இருப்பவை கிறுக்கன் அல்ல தமிழ் எழுத்துகள் என்ற உன்மையை சமூகமக்களுக்கு தெரியப்படுத்தினார். 

                  சோழர் கல்வெட்டை படித்த ஆய்வாளர்கள் அனைவரும்  அந்த சொற்களுக்கு 20 ஆம் நூற்றாண்டின் அர்த்தையே பெரும்பாலும் சொன்னார்கள். அதனால்  கல்வெட்டிலுள்ள  தீண்டாச் சேரி பகுதி என்ற அந்த இடமானது தீண்டத்தகாதவர்கள் வாழ்ந்த சேரிப் பகுதி என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். 

சேரி என்பது என்ன? :
                  இராஜராஜன் காலத்தில் எதை தீண்டாமை சேரி என்று காரினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். அதை தெரிந்து கொண்டாலே அக்காலகட்டத்தில் தீண்டாமை இருந்ததா என்பது தெரியவந்துவிடும். சோரி என்பது சேழர் கால்வெட்டில் தளிச்சேரி என்று தேவர்கள் வாழும் பகுதியாகவும். பறைச்சேரி என்பது அரசின் செய்தியை வெளியிடுபவர்களாகவும்  குறிப்பிடப்படுகிறது. அது போலத்தான் தீண்டாசேரியும் மக்கள் வாழும் இடம். ஆனால் சரியான ஆய்வுகளை செய்யாமல் தீண்டாமை தீண்டசேரி என்ற பகுதியில் வாழ்ந்த மக்களை  தாழ்த்தப்பட்டவர்கள் என்று தவறாக சொல்லப்படுகிறது. 
                 தீண்டசேரி என்பதன
 தமிழர்கள்  தாய் நிலத்தில் அதுவும் ஒன்று. தொல்காப்பியத்தில் தமிழகத்தில் உள்ள நிலங்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பெயர்களும் வைக்கப்பட்டு இருந்தன. 
                இந்த வகை நிலங்களை கொண்டு ஊர் பெயர்கள் அமைந்து இருக்கும். இதுபோலவே காடும் காடு சார்ந்த பகுதியகவும்
 உள்ள முல்லை நிலத்திற்கு உரிய 3 பெயர்கள் தொல்காப்பியம் கூறுகிறது. அவை பாடி, சேரி, பள்ளி.
 திருக்காட்டுப்பள்ளி  என்பதில் உள்ள பள்ளி என்பது எப்படி ஊர் பெயரோ அதேபோலத்தான் தீண்டசேரி என்பதும் ஊர் பெயர் ஆகும். 
சோழர் காலத்தில் காட்களை அழித்துதான் குடியேற்றங்கள் அமைத்தனர். அதால் சோழர்களால் காடுகளை அழித்து உருபெற்ற இடங்கள் மலை யோரத்திலும் நகரத்தை விட்டு தல்லியும் இருக்கும் அந்த இடத்திற்கு தீண்டாசேரி என்றும் பெயர் வைத்தனர். 

தீண்டசேரி என்பது ஒரு. ஊர் பெயர் மட்டுமே தவிர அது உதுக்க பட்ட மக்கள் வாழும் இடம் இல்லை சொல்லும் பொருளும் காலத்திற்கு ஏற்றவாற மாரும்
அதை நாம் தான் சரியாக படித்து புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தவறான புரிதல் வரலாற்றில் பல தவறான மாற்றத்தை ஏற்படுத்தும்.
 இராஜராஜன் ஆட்சி காலத்தில் தாழ்த்த பட்ட மக்கள் என்று யாரும் இல்லை. விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் தான் தாழ்த்த பட்டமக்கள் என்ற ஒரு இனத்தை ஏற்படுத்தினர்
சோழர் கால  ஆட்சிலம் முடிந்தபிறகு  .